மல்லிகைப் பூச்செடியில் இலைச்சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த…
1.. காட்டு வெங்காய சாறு, ஆடுதிண்ணாப்பாளை இலைச்சாறு, வேப்ப இலைச்சாறு, நாய்துளசி இலைச்சாறு ஆகிய ஒவ்வொன்றிலும் 1 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.. அவற்றை ஒன்று சேர்த்து ஒரு மண் பானையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
3.. பின்னர் எருக்குழியில் புதைத்துவைத்து 20 நாட்கள் கழித்து பானையை எடுக்க வேண்டும்.
4.. எடுத்த பானையில் உள்ள கலவையினை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து மாலை நேரங்களில் மல்லிகை பூச்செடியில் தெளிக்க வேண்டும்.
இப்படி தெளிப்பதால் இலைச்சுருட்டுப்புழு வெகுவாக கட்டுப்படுத்தலாம்.