நெல் பயிரிடும்போது இந்த உத்தியைப் பயன்படுத்தினால் களை வராது…

 |  First Published Jul 3, 2017, 12:44 PM IST
If we use this technique when wearing paddy we will not be weary ...



நெல்லைப் பயிரிடும்போது, முதலில் எந்த இடத்தில் பயிரிடுகிறோமோ அந்த இடத்தை தீமூட்டம் செய்து விட்டால் ‘களை’ வருவதில்லை. பின் களை நேர்த்தி செய்யலாம்.

விதை நேர்த்தி செய்யும் முறை:

Tap to resize

Latest Videos

பத்து கிலோ விதைக்கு மூன்று கைப்பிடி உப்பு போட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மேலாக மிதந்து வரும் விதைகளை எடுத்து போட்டு விட வேண்டும். கீழே தங்கும் விதைகளை நிழலில் உலர்த்தி அதை உபயோகப்படுத்த வேண்டும்.

நிலத்தில் 10 கிலோ விதை நடுவதற்கு முன்பு 30 கிலோ வேப்பம் புண்ணாக்கை நிலத்தில் இட்டு புன் விதை விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

புழுதி நடவு:

நெல் நாற்று வந்ததும் 26 நாட்களுக்குள் அதை பிடுங்கி 15 இஞ்ச் இடைவெளியில் நட வேண்டும். அப்படி நடுவதால் நன்றாக கிளைத்து வளரும். இம்முறைப்படி பயிரிட்டால் ஒரு ஏக்கர் அறுவடைக்கு 10 ஆட்கள் போதும் 40 ஆட்கள் தேவையில்லை.

நடவின்போது பூமியை அதிகமாக தோண்டுதலோ, குடைதலோ கூடாது. மேலாக நட்டால்தான் பிடுங்கி நடும்போது ஒரு நாற்று கூட வீணாகாது.

திரவ உரம் தயாரித்தல்:

பசு மாட்டு சாணி, கோமியம், புளித்த தயிர், சோற்றுக் கற்றாழை 15 மடல்கள், கம்பு மாவு, தேங்காய் தண்னீர் இவற்றை கலந்து 21 நாட்கள் புளிக்க வைக்க வேண்டும். பின் அதில் ஒரு பாகத்திற்கு 10 பாகம் தண்ணீர் கலந்து பயிருக்கு பாய்ச்ச வேண்டும்.

நெல் நாற்றுகள் நல்ல வளர்ச்சி கிடைக்க: பெரும்பாலும் நெல் நாற்றுகள் விரைவில் வளர்ச்சியடைய நல்ல தூர் கட்டவும் யூரியாவை தூவுவர். இதற்கு பதிலாக கடலை பிண்ணாக்குடன் மாட்டு கோமியம் சேர்த்து தெளித்தால் நாற்றுக்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும். 8 ஏக்கர் நிலத்தில், சுமார் 50 செண்ட் நிலத்தில் 400 கிலோ விதை விதைக்க வேண்டும்.

நாற்றாங்காளில் நாற்று பிடுங்க 10 நாட்கள் உள்ளபோது 10 கிலோ கடலை பிண்ணாக்குடன் 20 லிட்டர் கோமியம் சேர்த்து 2 நாட்கள் ஊறவைத்து பின்னர் நீர் பயும் வாய்க்கால் வழியே கலந்து விட்டால் துரித வளர்ச்சியும், தூறும் நன்றாக கட்டும்.

நெல்லில் வெள்ளை முறியான் நோயை கட்டுப்படுத்த:

100 மிலி நல்லெண்ணை, 1 லிட்டர் பசுமாட்டு கோமியம் இரண்டையும் ஒன்று சேர்த்து 10 லிட்டர் நீரில் கலந்து காலை நேரங்களில் தெளிக்க வெள்ளை முறியான் நோய் கட்டுப்படுகிறது.

நெல் கதிர்நாவாய்ப்பூச்சியை கட்டுப்படுத்த:

நெல் பயிரிடுவதற்கு முன்னர் கீழ்கண்ட முறையில் மருந்து தயாரித்து தெளித்தால் நெல் கதிர்நாவாய்ப்பூச்சி கட்டுப்படுகிறது.

ஒரு பானையில் நொச்சித்தழை 2 கிலோ, வேப்பந்தழை 1 கிலோ, வேப்பங்கொட்டை 2 கிலோ, ஊமத்தை தழை 1/2 கிலோ, எருக்கந்தழை 1/2 கிலோ ஆகியவற்றை ஆட்டி வடிக்கட்டி அத்துடன் 4 லிட்டர் கோமியம் சேர்த்து 1 நாள் ஊற வைக்க வேண்டும். 

கடைசியில் முடக்கத்தான் இரண்டு கைப்பிடி அரைத்து அதன் சாற்றையும் சேர்த்து பின்னர் 1 ஏக்கருக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.  நெல் கதிர் நாவாய்ப் பூச்சியை கட்டுப்படும்

click me!