குண்டு மல்லி சாகுபடியில் நடவு முறை;
1.. குண்டு மல்லி கன்றுகள் செடிக்கு செடி 1.20 மீட்டர் இடைவெளியிலும், 1.20 மீட்டர் வரிக்கு வரி இடைவெளியிலும் நடவு செய்யும் போது ஒரு எக்டேருக்கு 6400 செடிகள் வரை நடவு செய்யலாம்.
2.. ஜாதி மல்லி கன்றுகள் வரிக்கு வரி 2 மீட்டர் இடைவெளியிலும், 1.5 மீட்டர் செடிக்கு செடி இடைவெளியிலும் நடவு செய்தால் எக்டேருக்கு 3350 செடிகள் வரை நடவு செய்யலாம்.
3.. முல்லை 1.5 மீட்டர் வரிக்கு வரியிலும், 1.5 மீட்டர் செடிக்கு செடி இடைவெளியிலும் நடவு செய்தால் ஒரு எக்டேருக்கு 4400 செடிகள் வரை நடவு செய்யலாம்.
4.. குண்டு மல்லியில் தாய் செடிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மிதமான கடின குச்சிகள்,நுனி குச்சிகள் வாயிலாகவும், மண் பதியன்கள் வாயிலாகவும் நடவு செடிகளை உற்பத்தி செய்யலாம்.
5.. ஜாதி மல்லி நுனி குச்சிகள் கொண்டு மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். • முல்லையில் தாய் செடிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மிதமான கடின குச்சிகளைக் கொண்டு நடவு செடிகளை உற்பத்தி செய்யலாம்.
6.. நடவு குச்சிகள் தயார் செய்யும் போது வளர்ச்சி ஊக்கியான ஐஎஎ 1000-2500 பிபிஎம் கொண்டு நனைத்து நடவு செய்வதால் நன்றாக வேர் பிடித்து அதிக அளவில் நடவு செடிகள் கிடைக்கும்.
7.. 45க்கு 45 செமீ அளவில் குழிகள் எடுத்து மேல் மண்ணுடன் 10 முதல் 15 கிலோ நன்றாக மக்கிய சாண எரு கலந்து குழியை மூட வேண்டும். குழி நன்றாக நனையும் வகையில் தண்ணீர் விட வேண்டும்.
8.. செடி நடவு மாலை வேளைகளில் செய்தல் வேண்டும். ஜீன் முதல் நவம்பர் வரையிலான காலம் மல்லிகை பயிரிட ஏற்ற மாதங்களாகும். இந்த மாதங்களில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்கள் இடையில் வருவதால் நடவு செய்த செடிகள் நன்றாக வளரும்.