undefined
இலை கருகல் நோய்:
இலை கருகல் நோய் இரண்டு வகையான பூஞ்சைகளால் ஏற்படுகிறது. அவை செர்கோஸ்போரா ஜாஸ்மிகோலா, அல்டர்நேரியா ஜாஸ்மினி போன்றவையாகும்.
இலையின் மேற்பரப்பில் இரண்டு முதல் எட்டு மிமீ அளவிற்கு சிவப்பு கலரில் வட்ட வடிவமான புள்ளிகள் தோன்றுகிறது.
பின்னர் இது இலையின் விளிம்பு பகுதிகளை நோக்கி நகர்ந்து கருகலை ஏற்படுத்தும். இலைகள் மட்டுமல்லாது கிளைகளையும் பாதிக்கும்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பென்லெட் 0.2 சதவீத கரைசல் அல்லது டைத்தேன் எம் 45 0.2 சதவீத கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இலைத்துருநோய்:
இது மூன்று வகையான மல்லிகை செடிகளையும் தாக்குகிறது. இலையின் அடிபாகத்தில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.
இது முற்றிய நிலையில் துரு போன்றாகி இலையைக் கருகச் செய்கிறது.
ஏக்கருக்கு 6 முதல் 7 கிலோ வரை சல்பர் தூவுவதன் வாயிலாக இதை கட்டுப்படுத்தலாம்.
வாடல் நோய்:
இது பியுசோரியம் சொலானி என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த நோய் குண்டு மல்லியை அதிக அளவில் பாதிக்கிறது.
முதலில் முற்றிய இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறத் தொடங்கி, நோய் முற்றிய நிலையில் இளம் இலைகளையும் மஞ்சள் நிறமாக மாற்றியபின் முழு செடியையும் அழித்துவிடுகிறது.
இதனை கட்டுப்படுத்த 1லிட்டர் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை 1லிட்டர் தண்ணீரில் 2 கிராம் என்ற அளவில் கலந்து ஒரு செடிக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் செடியை சுற்றி நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும்.