பூச்சிகளை கட்டுப்படுத்தும் உழவியல் முறை:
undefined
1.. ஆழமாக உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும், நோய்க் காரணிகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணிற்கு மேலே கொண்டு வரப்பட்ட பறவைகளால் உண்ணப்படுகின்றன.
2.. பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அதிகமாகத் தழைச்சத்து உரமிடும் போது அது பூச்சி நோய் காரணிகளின் பெருக்கத்திற்குக் காரணமாகிறது. அதனால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை ஒரே தடவை இடாமல் இரண்டு, மூன்று முறைகள் பிரித்து இடுவதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.
உதாரணம்: நெல் குலைநோய்,நெல் புகையான்
3.. நல்ல தரமுள்ள பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளை விதைப்பதன் மூலம் பல பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம்.
4.. எதிர்ப்புத் திறனுடைய இரகங்களைத் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். (உதாரணம்): நெல்லில் புகையினைத் தடுக்க PY-3, கோ-42, கோ-45, DAP-36 இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ATP-25 போன்ற இரகங்கள் நெல் குலை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டவை.
5.. நாற்றுகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்தால் நெல்,தண்டு துளைப்பானின் தாக்குதலை தவிர்க்கலாம்.
6.. நீர் பாய்ச்சுவதையும், நீர்வடிப்பதையும் ஒரு நாள் இடைவெளி விட்டு மாற்றி மாற்றி செய்து நெல்லில் புகையானைக் கட்டுப்படுத்தலாம்.
7.. வயலை எப்போதும் களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பது பூச்சி நோய்களைத் தவிர்க்கும். ஏனெனில் களைசெடிகள் பூச்சி மற்றும் நோய் காரணிகளுக்கும் உறவிடமாகவும், மாற்று உணவாகவும் திகழ்கின்றன.
8.. கரும்பில் களை எடுத்து, மண் அணைத்து விடுவது கரும்புத் தண்டுப் புழுக்களைத் தடுக்கிறது.