1.. மண்ணின் ஊட்டச்சத்து நிலை அறிந்து உரமிட வேண்டும். மண்ணில் ஊட்டச்சத்து குறைநிலையில் உள்ள போது சிபாரிசு செய்யப்பட்ட அளவில் 25 சதம் அதிகமாகவும், அதிக நிலையில் உள்ள போது 25 சதம் குறைவாகவும் உரமிட வேண்டும்.
2.. ஊட்டச்சத்து பயன்பாட்டு திறனை சொட்டு நீர் மற்றும் நீர்வழி உரமிடுதல் மூலம் அதிகரிக்கலாம்.
3.. பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 50 சதத்தை அடி உரமாகவும், 25 சதம் வீதம் இரண்டு மேலுரமாக இட்டு உரபயன்பாட்டு திறனை அதிகரிக்கலாம்.
4.. மெதுவாக கரையக் கூடிய பூச்சு செய்யப்பட்ட யூரியாவை பயன்படுத்தி தழைச்சத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிக்கலாம்.
5.. எளிதில் கரையாத ராக் பாஸ்பேட்டை பயன்படுத்தி மணிசத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிக்கலாம்.
6.. இரசாயன உரங்களை தொழுஉரம் மற்றும் பசுந்தாள் உர்ங்களுடன் சேர்த்து இடலாம்.
7.. உயிர் உரங்களான அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகியவற்றுடன் இரசாயன உரங்களைக் கலந்து இடலாம்.
8.. மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க அவற்றை ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம்.