1.. மல்லிகை குறுகிய காலத்தில் அதிகளவில் வளர்ச்சியடையும் என்பதால் தேவையான உரத்தை சரியான நேரத்தில் கொடுப்பது அவசியம்.
2.. குண்டு மல்லிக்கு செடி ஒன்றிற்கு 60 கிராம் நைட்ரஜன், 120 கிராம் பாஸ்பரஸ், 120 கிராம் பொட்டாஷ் என்ற விகிதத்திலும், முல்லை செடி ஒன்றுக்கு 60 கிராம் நைட்ரஜன், 120 கிராம் பாஸ்பரஸ், 120 கிராம் பொட்டாஷ் என்ற விகிதத்திலும், ஜாதிமல்லி செடிக்கு 100 கிராம் நைட்ரஜன், 150 கிராம் பாஸ்பரஸ், 100 கிராம் பொட்டாஷ் என்ற விகிதத்திலும் உரமிட வேண்டும்.
3.. இதை கவாத்துக்கு பின்னர் வருடத்திற்கு இரண்டு முறை என்ற அளவில் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
4.. கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், ஜீன் மற்றும் ஜீலை மாதத்தில் மற்றொரு முறையும் சம அளவாக பிரித்து கொடுக்க வேண்டும்.
5.. உரமிட்டவுடன் நன்றாக நீர் பாய்ச்சுதல் வேண்டும்.