இலாபத்தை அள்ளித் தரும் தேனீக்கள்…

 |  First Published Nov 10, 2016, 6:13 AM IST



விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தொழிலான தேனீ வளர்ப்பில் ஈடுபட்டால்,அதிக சிரமம் இன்றி மாதமாதம் ஒரு நல்ல தொகையை இலாபமாக பெற முடியும்.

தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு சிறப்பான தொழிலாக வளர்ச்சியடைந்து உள்ளது.

Latest Videos

undefined

இதை செய்ய பெரிதாக முதலிடு என்று ஒன்றும் தேவை இல்லை.சுமார் 5  ஆயிரம் மதிப்பில் மாதம் சுமார் 15  லிட்டர் மதிப்பிலான தேனை உற்பத்தி செய்யகூடிய  தேன் பூச்சிகளும்,தேன் கூடுகளும் மற்றும் மெழுகு பூச்சுகளும் கொண்ட தேன் பெட்டியை பெறலாம்.

கரூரில் உள்ள அன்னை தேனீ பண்ணை, செயற்கை முறை தேனீ  வளர்ப்பில் "இத்தாலி தேனீ" வகை  பூச்சிகளை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த வகை தேன் பூச்சிகள் ,நாட்டு தேன் பூச்சிகளை விட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

நாட்டு தேனீக்களை விட 10  மடங்குக்கு  மேல் தேன் சேகரிக்கும் ஆற்றல்  உடையவை,நாட்டு தேனிக்கள் அரை கிலோ, ஒரு கிலோ தேன் உற்பத்தி செய்தால், இந்த இத்தாலிய தேனிக்கள் 10  முதல் 15  கிலோ வரை தேன் உற்பத்தி செய்யும் திறன் உடையவை.

இத்தாலிய தேனிக்கள் இயற்கையான எதிர்ப்பு சக்தி உடையவை  எனவே தாய்சாக்குபுழு  வைரஸ் போன்றவை இதை தாக்க முடியாது.

சிறு சிறு குழுக்களாக பிரிந்து வெளியேறும் தன்மை குறைவாகவே உள்ளது எனவே ஒரே பெட்டியில் அதிக தேனீக்களை வளர்த்து அதிக தேன் பெற முடியும்.

இந்த பூச்சிகள் இயல்பாகவே மிகவும் சாந்ததன்மை கொண்டது ,கொட்டும்தன்மை குறைந்தவை.

click me!