கறவை மாடுகளில் தீவன மேலாண்மை
அடர்தீவனம்
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானயங்களை அரைத்து கலந்து பயன்படுத்தப்படுகிறது. சில (2) வாரங்களுக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அடர்தீவனத்தை பால் ஊட்டியபின்பு கன்றின் வாயில் தேய்க்க வேண்டும். பின்பு கன்று அதை சாப்பிட்டு பழகிவிடும். கன்று வளர தானியங்களின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
கலப்புத் தீவனம்
தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் கன்றிற்கு சரியான தீவனம் அளித்தல் அவசியம். அடர்தீவனத்தில் கலந்துள்ள தானியங்களுடன் மேலும் பிண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், பருப்பு நொய், வெல்லப்பாகு, உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலூட்டத்தை நிறுத்தும் முன்பே இத்தீவனத்தை ஊட்டச் செய்ய வேண்டும். பாலூட்டம் இருக்கும்போது அதிக புரதம் உள்ள தானியங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏஎனனில் ஏற்கனவே பாலில் புரதம் அதிகம் உள்ளது.
மேற்கூறிய தானியங்களில் ஓட்ஸ் - 35%, லின்ஸீடு புண்ணாக்கு - 5%, தவிடு - 30%, பார்லே - 10%, கடலைப்பிண்ணாக்கு - 20%, கலவை சிறந்தது. அல்லது அரைத்த சோளம் 2 பங்கு கோதுமைத்தவிடு 2 பற்கு என்ற அளவினும் கலந்து அளிக்கலாம்.
கன்றுகளுக்கு சீம்பால் ஊட்டம்
ஊட்டப்பராமரிப்புகள் கன்றிலிருந்தே தொடங்க வேண்டும். கன்று ஈன்றவுடன் பசுவிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படுகிறது. இளம்கன்றிற்கு இது மிகவும் அவசியம். நாளொன்றிற்கு 2-21/2 லிட்டர் வீதம் முதல் 3 நாட்கள் கண்டிப்பாக சீம்பால் அளிக்கப்பட வேண்டும்.
இது கன்றின் செரிக்கும் தன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. முடிந்தால் எஞ்சிய பாலை சேகரித்து சிறிது இடைவெளி விட்டு கன்றிற்கு ஊட்டச்செய்யலாம்.
பசுவின் சாதாரண பாலில் உள்ளதை விட சீம்பாலில் புரதச்சத்து மிகவும் அதிகம். இதன் புரதத்தில் உள்ள குளோபுலின் கால்நடைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்த்துத் தாக்கும் சக்தி கொண்டது.
இதில் காமா - குளோபுலின் அளவு 0.97 மி.கி. / மி.லி கன்று ஈன்ற உடனும் 16.55 மி.கி. / மி.லி அளவு கன்று ஈன்ற 2 மணி நேரத்திலும் இரண்டாவது நாளில் 28-18 மி.கி. / மி.லி அளவாகவும் உள்ளது.