சாகுபடி செய்த தானிய வகை பயிரான மக்காச்சோளத்தை எப்போது அறுவடை செய்யணும்?

 |  First Published Oct 13, 2017, 11:58 AM IST
When will the harvest of maize grown maize be harvested?



** தீவன மக்காச்சோளம் பல்வேறு விதமான மண் ரகங்களில் வளரும் தன்மையுடையது. ஆனால் நல்ல வடிகால் கொண்ட சத்துகள் நிறைந்த வளமான மண்ணில் தீவன மக்காச்சோளம் நன்றாக வளரும்

** மக்காச்சோளம் கரிப் பருவத்தில் வளரும் பயிரமாகும். அதாவது ஜூன் மற்றும் ஜூலையில் விதைப்பு செய்யப்படும். தென்னிந்தியாவில், ராபி மற்றும் வெயில் காலங்களில் இது பயிர் செய்யப்படுகிறது

Tap to resize

Latest Videos

** தண்ணீர் பாசன வசதி கொண்ட நிலங்களில் மக்காச்சோளத்தினை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்

** ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்

** ஒவ்வொரு விதையையும் 30 செமீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் 15 செமீ இடைவெளியில் ஊன்றுவதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ விதை தேவைப்பபடும்

** ஒரு ஹெக்டேரில் விதைப்பு செய்த மக்காச்சோளத்தலிருந்து கிடைக்கும் தீவனத்தின் அளவு 40-50 டன்களாகும். ஆனால் இதன் டிரை மேட்டர் எனப்படும் தண்ணீரற்ற சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 10-15 டன்களாகும்

** நீண்ட நாட்களுக்கு பசுந்தீவனத்தினைப் பெற நேரடியாக விதைப்பு செய்யலாம்

** மக்காச்சோளக் கருது பால் கருதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும்.

click me!