முயல் மசால் தீவனப் பயிரை சாகுபடி செய்ய இந்த முறைதான் சரி…

 
Published : Oct 13, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
முயல் மசால் தீவனப் பயிரை சாகுபடி செய்ய இந்த முறைதான் சரி…

சுருக்கம்

This is the right time to cultivate rabbit masala

** முயல் மசால் நேராக வளரக்கூடியது. இதன் தாயகம் பிரேசில் ஆகும்.

** இது 0.6 முதல் 1.8 மீ வரை வளரக் கூடியது.

** வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரும் தன்மை படைத்தது

** வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய முயல் மசால், குறைந்த அளவு மழை பெறும் (450-840 மிமீ) பகுதிகளிலும் வளரும்

** பல்வேறு விதமான மண் வகைகளிலும் முயல் மசால் வளரக்கூடியது

** முயல் மசாலில் உள்ள புரதத்தின் அளவு 15-18 சதவிகிதமாகும்

** முயல் மசால் நன்கு வளரக்கூடிய பருவம் – ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை

** 30 x 15 செ.மீ வரிசையாக விதைப்பதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 6 கிலோ என்ற அளவிலும், தெளித்தல் முறையின் மூலம் விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவிலும் விதைகள் தேவைப்படும்

** விதைப்பு செய்து 75 நாட்கள் கழித்து, முயல் மசால் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த அறுவடைகள் இத்தீவனப் பயிரின் வளர்ச்சியனைப் பொருத்தது

** முதல் வருடத்தில், பயிரின் வளர்ச்சி குறைவாகவும், அதன் உற்பத்தியும் குறைவாகவும் இருக்கும்

** முயல் மசால் விதைப்பு செய்து ஒரு வருடம் ஆன பின்பு அதன் விதைகளே கீழே விழுந்து முளைத்து விடுவதால், ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் 35 டன்கள் வரை முயல் மசால் அறுவடை செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?