குதிரை மசால் தீவனப் பயிரை இந்த முறையில் எளிதாக சாகுபடி செய்யலாம்…

 |  First Published Oct 13, 2017, 11:55 AM IST
Horse mash can be grown in this manner easily.



** குதிரை மசால் தீவனப் பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.

** இது நன்கு ஆழமாக வேரூன்றி வருடம் முழுவதும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய பயிராகும்.

Tap to resize

Latest Videos

** நல்ல சுவையுள்ள பயிராகும். கச்சா புரதம் 15-20 சதவீதம் உள்ளது.

** இப்பயிர்களின் வேர்முடிச்சுகளால் நுண்ணுயிரிகள் பெருகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை படுத்துவதால் மண் வளம் அதிகரிக்கிறது.

** இதை பசுந்தீவனமாகவும்,உலர்தீவனமாகவும், ஊறுகாய் புல் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் மேய்ச்சல் தரையாக பயன்படுத்த இயலாது.

** ரகங்கள் – ஆனந்த் 2, சிர்ஸா -9, IGFRI S – 244, and கோ -1.

** கோ 1 ரகம் ஜூலை – டிசம்பர் காலத்திற்கு எற்றது.

** குதிரை மசால் மிக வெப்பமான மற்றும் மிகவும் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது அல்ல.

** விதை அளவு – 20 கிலோ / ஹெக்டர்.

** முதல் அறுவடை விதைப்பு செய்து 75-80 நாட்கள் கழித்தும், பிறகு 25 – 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.

click me!