1. விதைப்பயிர் உற்பத்தியில் விதைப்பு முதல் அறுவடை வரை உயரிய தொழில்நுட்பங்களைக் கையாள்வதுடன், தகுந்த ஆய்வாளர்களின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
2. வளமான வடிகால் வசதியுடன் கூடிய நிலம், முந்தைய பருவத்தில் அதே இரகப்பயிரானது பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.
3. விதைச்சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
4. அதே இரகம் மற்றும் பிற இரகப்பயிர்களிடமிருந்து வயலின் நான்கு பக்கங்களிலும் குறிப்பிட்ட அளவு பயிர் விலகு தூரம் இருத்தல் வேண்டும்.
5. குறிப்பிட்ட இரக செடிகளில் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட மற்றும் நோய் தாக்கிய செடிகளை நீக்க வேண்டும்.
6. சான்றளித்த துறையினரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
7. வினையியல் முதிர்ச்சி பெற்ற கதிர்களை அறுவடை செய்ய வேண்டும்.
8. விதை நிறம் மற்றும் விதை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கதிர்களைத் தரம் பிரிக்க வேண்டும்.
9. விதை பகுப்பாய்வு செய்யப்பட்டு விதைத்தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.