ஐயிரை மீன் மிகவும் சிறிய உருவ அமைப்பைக் கொண்டது. அதிக பட்சம் 2 -3 கிராம் அளவுக்குத் தான் எடை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் தனியாக வளர்ப்பதில்லை.
கெண்டை மீனுடன் கூட்டாகத்தான் வளர்ப்பார்கள். காரணம் ஐயிரை மீன், குளத்தின் அடியில் தான் இருக்கும். அதுவும் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். இதனால் மேல்மட்டநீரில் வளரும். கெண்டை மீன் இரகத்தைச் சேர்த்து வளர்ப்பதால் கூடுதல் இலாபம் கிடைக்கும்.
ஐயிரை மீனின் வயது 4 மாதம். இதற்கு மேல் வளர்த்தாலும் எடை கூடாது. வளர்ச்சியும் இருக்காது.
எனவே நான்கு மாதத்திற்குள் இதை அறுவடை செய்ய வேண்டும். ஐயிரை மீன்கள் நேரடியாக உணவு பொருட்களை உட்கொள்ளாது. மட்கிய உணவுப் பொருட்களை மட்டும் தான் உண்ணும்.
ஐயிரை மீன் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனால் ஐயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும்.