இயற்கை முறையில் பூச்சி தடுப்பான்கள்..

 |  First Published Oct 27, 2016, 4:27 AM IST



நவீன சாகுபடி முறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் தோன்றும் முன்னேற, இந்திய விவசாயிகள் வெற்றிகரமாக சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரம், பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் சிலவற்றையும் கையாண்டனர். இவ்வாறான வழிமுறைகள், வரும் தலைமுறையினருக்கு, வாய்வழி வார்த்தைகளாக கொண்டு செல்லப்பட்டது.

பாரம்பரிய செயல்முறைகள் இடத்துக்கு இடம் மாறுப்பட்டாலும், அவைகளின் பூச்சி கட்டுப்பாட்டுத்திறன் ஆதாரப்பூர்வமாக்கப்பட்டு, உபயோகப்படுத்துகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டின் கன்னியாகுமாரி மாவட்டம், கோழிக்கொட்டு போதை (kozhikottu pothai) எனும் சிறு ¸¢ராமத்தில் இன்னும் பல விவசாயிகள் பூச்சி அச்சுறுத்தலை சமாளிக்க ஒரு சில பாரம்பரிய திட்டங்களை கடைப்பிடிக்கின்றனர்.

பயனுள்ள தீர்வு முறைகள்:
கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ்.அரவிந்த் கூறுகையில் இத்தயாரிப்புகள் பயிர் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை தற்காலிகமாக தடுக்க உடனடி தீர்வு அளிக்கும். மேலும் இது விவசாயிகளை கடனாளிகள் ஆவதை தடுக்கும் என்று கூறுகிறார்.

எளிய முறையில் கிடைக்கும் தயாரிப்புகள்:
“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று திரு.எஸ். அரவிந்தன் கூறினார். பப்பாளி இலையை கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து, அதை விவசாயிகள் உபயோகித்தனர். இதை தயாரிக்க சுமார் 1 கிலோ பப்பாளி இலையை தண்ணீரில் நன்கு நனைத்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் இவ்விலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கலாம். புங்கைச் சாறு நான்கு விதமாக தயாரிக்கப்படுகிறது. முதன் முறையில், புங்கையின் இலையை தலா 1 கிலோ எடுத்து ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நனைத்து வைக்க வேண்டும். பின் அதை அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்களாம். இரண்டாவது முறையில் புங்கையின் விதைகளை சுமார் 50 கிராம் எடுத்து அதை அரைத்து தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கவும். பின் அதை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க உபயோகப்படுத்தலாம். மூன்றாவது முறையில், புங்கைப் புண்ணாக்கு சுமார் 100 கிராம் எடுத்து, அதை தண்ணீரில் நனைத்து சிறு நேரம் கழித்து, அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இதே முறையில், புங்கை புண்ணாக்குடன், வேப்புண்ணாக்Ìம் கலத்து உபயோகிக்கலாம். இதில் கூடுதலாக அரை லிட்டர் கற்றாழழை சாறும், 3 லிட்டர் மாட்டின் சிறுநீர¸ம் கலக்கப்படவேண்டும். இந்த கலவையை 15 லிட்டர் தண்ணீரில் ஊறப்§À¡ட்டு ஒரு முழு இரவு வைத்து இருக்கவும். அடுத்Ð இக்கரைசலில் இருந்து 6 லிட்டர் கலவையை ±டுத்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். சில விவசாயிகள் துளசி இலைகளையும் பயிர் பூச்சி தாக்குதலுக்Ì உபயோகிக்கின்றனர். சுமார் 100 கிராம் துளசி இலை தண்ணீரில் நனைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். அடுத்த நாள் இதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்பட்டு தெளிக்கப்பட வேண்டும். இதே போல், 1 கிலோ மஞ்சளை, சுமார் 1 லிட்டர் மாட்டு சிறுநீÕடன் கலந்து ஒரு þரவு முழுவதும் வைக்கவும், பின் மஞ்சளை எடுத்து அவற்றை நன்கு அரைத்து, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
இப்புங்கை சாறுத் தயாரிப்புப் போல வேம்புச் சாறும் மூன்று வகையில் தயாரிக்கலாம்.
முதல் வகையில், சுமார் 6 கிலோ வேம்பு இலையை தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதை நன்கு அரைத்து, 60 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
இரண்டாவது வகையில், சுமார் 3 கிலோ வேம்பு விதைகளை தண்ணீரில் நனைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து அதை அரைத்து கூழாக்கி பின் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மூன்றாவது வகையில், சுமார் 6 கிலா வேப்பபுண்ணாக்கினை நன்கு அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து, அதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
மேலும், சில விவசாயிகள் பொதுவான இலைச்சாறு ஒன்றையும் உபயோகிக்கின்றனர். அது “மூன்று இலைக்கரைசல்” எனப்படும். இக்கரைசல் தயாரிக்க சுமார் 3 கிலோ எருக்கு, வேம்பு மற்றும் நொச்சி இம்மூன்றையும் சுமார் 3 லிட்டர் மாட்டு சிறுநீரில் நனைத்து 2 லிட்டர் தண்ணீரில் ஊறவிடவேண்டும். இதை ஒரு இரவு முழுவதும் வைத்து, பின் இதை வடிகட்டி, மீண்டும் 60 லிட்டர் தண்ணீர் கலந்து, உபயோகிக்கலாம். வழக்கமாக கரைச்சலை வடிகட்ட தூய பருத்தித் துணியை பயன்படுத்தவேண்டும். மேலும் இதனுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 4 கிராம் காதி சோப் கரைசலை சேர்த்து, தெளிக்கலாம்.

Tap to resize

Latest Videos

click me!