ஏழு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சி பின், கர்நாடகாவில் தார்வாத் ஊரில் உள்ள வேளாண் பலகலை கழகம் (University of Agricultural Sciences, Dharwad, Karnataka) ஒரு உண்மையை கண்டு வெளியிட்டு உள்ளது.
இயற்கை வழி விவசாயம் செய்ய முன்படும் போது கேட்க படும் கேள்வி “எல்லாம் சரி. இயற்கை விவசாயத்தில் இதே அளவு சாகுபடி கிடைக்குமா? வருமானம் குறையுமா?” என்பது தான். இந்த கேள்விக்கு கர்நாடக வேளாண் பல்கலை கழகம் 7 ஆண்டுகள் விஞ்ஞான முறையாக ஆராய்ச்சி செய்து வெளியுட்டுள அறிக்கை தான் இது:
இயற்கை முறை விவசாயத்திற்கு மாறும் போது, மிளகாய், பருத்தி, சோளம் போன்றவற்றில் முதலில் 2 ஆண்டுகள் சாகுபடி சற்று குறைந்து இருந்தது. ஆனால, அதற்கு பின், இரண்டு முறைக்கும் எந்த பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சோயா, வெங்காயம், கடலை போன்ற பயிர்களில் இந்த முதல் இரண்டு வருட சாகுபடி குறைவும் இல்லை. உதாரணமாக கடலை சாகுபடியில் 6 ஆண்டுகாண சாகுபடியில், இயற்கை விவசாயத்தில் 2975 kg /எக்டரும் இரசாயன விவசாயத்தில் 2604 kg /எக்டேரும் கிடைத்தது
மேலும், இயற்கை விவசாயத்தில் ஊடு பொருட்களின் விலை குறைவு ஆதலால், இலாபம் அதிகம். இயற்கை ஊடு பொருட்களால் நிலத்தில் 10-15% நீர் தேக்கும் சக்தி அதிகரிக்கிறது. இதனால் வறட்சியை இவை தாங்குகிறது.
இந்த ஆராய்ச்சியின் போது இயற்கை விவசாயத்திற்கு மண்புழு உரம் கம்போஸ்ட் போன்றவை பயன் படுத்தபட்டன.
இப்படி பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவு அரசால் நடத்த படும் ஒரு வேளாண் பல்கலை கழகத்தில் இருந்து வெளி வந்துள்ளது நல்ல செய்தி அல்லவா!