எலுமிச்சை சாகுபடி செய்வது பற்றிய தகவல்கள் இங்கே…

 
Published : Oct 27, 2016, 04:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
எலுமிச்சை சாகுபடி செய்வது பற்றிய தகவல்கள் இங்கே…

சுருக்கம்

தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.

சாகுபடி பரப்பளவு அதிகம்:
எலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது. எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம். பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.

வடிகால் வசதி

பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது. மேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.

எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம். எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது. நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.

பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும். இலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.

இரகங்கள்

பி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் இரகங்களாகும். இவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய இரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும். எனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை இரகங்களை தேர்ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?