கறவை மாடுகளை பெரும்பாலும் தாக்கும் ஒரு நோயாக மடிவீக்க நோய் இருக்கிறது. இந்த நோய் கறவை மாடுகளை தாக்கிவிட்டால் என்ன பண்ணனும்னு பார்க்கலாம்.
மடிவீக்க நோய்:
1.. கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண் கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது.
2.. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத் தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும்.
3.. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.
4.. மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியவை:
1.. ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப்பொருட்கள்
சோற்றுக்கற்றாழை – 200 கிராம் [ஒரு மடல்]
மஞ்சள் பொடி – 50 கிராம்
சுண்ணாம்பு – 5 கிராம் [ஒரு புளியங்கொட்டை அளவு]
சிகிச்சை முறை:
மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவவேண்டும்.
நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் தடவினால் மடி வீக்கம் குறையும்.