நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை இயற்கை முறையில் செய்யலாமா?

 |  First Published May 4, 2017, 12:34 PM IST
Can the pest and disease management be done naturally in rice?



நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை இயற்கை முறையில் தாரளமாக செய்யலாம்.

பின்வரும் இயற்கை முறையைப் பின்பற்றி நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்யலாம்.

Tap to resize

Latest Videos

இயற்கை முறை:

1.. சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும் அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி செய்யனும்,

2.. இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில் நாற்றங்காலில் இடனும்.

3. மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட பின் 20-30 நாட்களில் 1 எக்கருக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

4.. நடவு நட்ட 25-ம் நாள் முதல் இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வீதம் வைப்பதன் மூலம் குருத்துப்பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

5.. பொறியில் உள்ள இனக்கவர்ச்சி குப்பியை 3 வாரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

click me!