ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்தால் ஒரு வருடத்தில் ரூ.2 இலட்சம் வருமானம் பெறலாம். அதற்கான வழிகள் இதோ...
விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள் விளைபொருளை நகரத்தில் உள்ள வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதைவிட, நேரடியாக மதிப்புக் கூட்டு பொருளாக விற்றால் பலமடங்கு லாபம் கிடைக்கும்.
இதற்கு “நபார்டு’ மூலம் உதவிப் பெற்றுக் கொள்ளலாம்.
மூங்கில்:
1.. புல்வகையைச் சேர்ந்த மூங்கில், 47 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை பெற்று, 35 சதவீத ஆக்சிஜனை வெளியிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
2.. ஒரு ஏக்கரில் 30 டன்வரை சருகுகளை உதிர்ப்பதால், அவை மக்கி இயற்கை உரமாக மாறி மண்வளம் பெருகுகிறது.
3.. ஒரு ஏக்கரில் 2 ஆயிரம் மூங்கில் சாகுபடி செய்தால் ஆண்டுக்கு ரூ.2 இலட்சம் கிடைப்பது உறுதி.
4.. பவர் பிளான்ட், கைவினை பொருள், காகிதம், கட்டுமான வேலைக்கு மூங்கில் தேவை என்பதால் வருமானத்தில் சந்தேகம் வேண்டாம்.
5.. மூங்கில் குருத்தில் இருந்து ஊறுகாய், பொரியல், கேசரி, மிட்டாய், அல்வா, இட்லி பொடி தயாரிக்கலாம். இதுபோன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் இலாபம் இரட்டிப்பாகும்.
மூங்கிலின் தேவை அதிகம் என்பதால் பிற மாநிலத்தில் இருந்துகூட வாங்கிச் செல்வர் இதனை பயிரிட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம்.