தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆட்டுக் குட்டிகளுக்கு எப்படிப்பட்ட தீவனத்தை கொடுக்கலாம்…

 |  First Published Oct 12, 2017, 11:43 AM IST
What kind of feed can be given to lambs separated from their mother ...



** குட்டிகளைப் பொதுவாக மூன்று மாத வயதில் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். தாயிழந்த அல்லது தாயால் ஒதுக்கப்பட்ட (அநாதை) குட்டிகளும் உண்டு.

** பால் குடிக்கும் இளங்குட்டிகள், தாயிடமிருந்து விரைவிலேயே பிரிக்கப்பட்டவை, அநாதை குட்டிகளுக்கும் நன்றாகத் தீவனமளிக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

** ஆறு வார வயது வரை, குட்டிகளுக்குத் தானியங்களை உடைத்துத் தான் தர வேண்டும். கடினத் தோலுடைய தானியங்களைத் தவிர்த்து மற்றவை பின் நாட்களில் அப்படியே வழங்கப்படலாம்.

** தானியங்களுடன் இவற்றுக்குத் துண்டாக்கப்பட்ட நல்ல பசும்புல் அல்லது பயிறு வகை உலர் புல்லும் அளிக்கப்பட வேண்டும்.

** பயிறு வகை உலர் புல் அல்லது தரமான மேய்ச்சல் இல்லாத போது, வெறும் குறைவான நார்த்தீவனம் மட்டுமே கிடைக்கும் சமயங்களில் தானிய  தீவனத்துடன் புரதமும் உயிர்ச்சத்துக்களும் ஏறக்குறைய 12சதவிகித செரிமான கச்சா புரதமும் கிடைக்குமளவில் சேர்க்க வேண்டும்.

** நார்த்தீவனம் மற்றும் அடர்த்தீவனம் இரண்டும் கலந்த தீவனத்தை முழுவதுமாகவே குறுணை வடிவமாக்கிக் கொடுத்தல் இலாபகரமானது. இதன் மூலம் குட்டிகள் நிறைய தீவனம் உட்கொள்வதோடு, விரைவில் வளரவும் வழி செய்கிறது.

** குருணைகளில் ஊட்டச்சத்துக்களைத் தேவைக்கேற்ற அளவில் எளிதில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, குட்டிகள் தானாகவே உட்கொள்ளக் கூடியதாகவும் உள்ளதால், மொத்தமாக தீவனம் உட்கொள்ளும் அளவை ஏறக்குறைய நிலையானதாக மாற்ற முடியும்.

** குருணைகளில், ஆரம்பத்தில் நார்ச்சத்தானது 65லிருந்து 70 சதவிகிதம் உள்ளது. பின்னர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 10லிருந்து 12 வார வயதில், 50சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

 

click me!