இளம் ஆட்டுக் குட்டிகளுக்கான தீவனப் பராமரிப்பை இப்படிதான் மேற்கொள்ளணும்…

 |  First Published Oct 12, 2017, 11:41 AM IST
Feeding for young goats



** இளங்குட்டிகளுக்கு ஒரு மாதத்திலிருந்து 3 மாத வயதிலேயே தீவனமளிக்கத் தொடங்கி விட வேண்டும்.

** இளங்குட்டிகளுக்கென தீவனமளிப்பது அவற்றின் துரித வளர்ச்சிக்கு உதவுகின்றது.

Tap to resize

Latest Videos

** ஒரு குட்டிக்கு ஒரு நாளைக்கு 50லிருந்து 100கிராம் அளவு தீவனம் கொடுக்கலாம். இதில் 22 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும்.

** ஆக்ஸிடெட்ராசைக்லின் அல்லது க்ளேர்டெட்ராசைக்லின் போன்ற நுண்ணுயிர்கொல்லிகள் 15லிருந்து 25மி/கி என்ற அளவில் தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

இளங்குட்டிகளின் தீவனக்கலவை

மக்காச்சோளம்                                 -           40 சதவிகிதம்

கடலைப் பிண்ணாக்கு                     -           30 சதவிகிதம்

கோதுமைத் தவிடு                            -           10 சதவிகிதம்

எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி உமி           -           13 சதவிகிதம்

கரும்புச் சர்க்கரைப்பாகு                  -           5 சதவிகிதம்

தாது உப்புக் கலவை                                    -           2 சதவிகிதம்

உப்பு                                                   -           1 சதவிகிதம்

இவற்றுடன் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி2 மற்றும் டி3, நுண்ணுயிர்க்கொல்லி ஆகியவை சேர்க்கப்பட்டு ஊட்டச்சத்து ஏற்றம் செய்யப்பட வேண்டும்.

click me!