குட்டிகள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைக்குப் பெரிதும் தாய்ப்பாலையே சார்ந்திருக்கின்றன. குட்டிகளுக்கு ஒரு மாத வயதாகும்போது அடர் தீவனம் அளிக்கத் தொடங்க வேண்டும்.
குட்டிகளுக்குச் சீம்பால் அளித்தல்
** முதல் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குக் குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க அவற்றைத் தன் தாயிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும்.
** குட்டிகளின் இழப்பைத் தவிர்ப்பதில் சீம்பால் அளித்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பசுவின் சீம்பால் கூட குட்டிகளுக்கு மிகவும் சிறந்தது.
** ஒரு கிலோ உயிர் எடைக்க 100மி.லி. என்ற அளவில் சீம்பால் அளிக்க வேண்டும். சீம்பாலை 1-1.5 சதவிகிதம் (கனஅளவு/எடை) ப்ரோபியோனிக் அமிலம் அல்லது 0.1 சதவிகிதம் ஃபார்மால்-டிஹைட் கொண்டு பதப்படுத்தலாம்.
** சீம்பாலின் அமிலக் காரக் குறியீட்டைக் குறைவாகவே வைப்பதால் ப்ரோபியோனிக் அமிலமே ஏற்றதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தப்படும் சீம்பாலின் தரத்தைப் பாதுகாக்க குளிர் நிலையில் வைத்தல் வேண்டும்.