ஆடுகளின் சினைக்காலத்திற்கு முன்னும், நடுவிலும் எப்படிப்பட்ட தீவனத்தைக் கொடுக்கலாம்?

 |  First Published Oct 11, 2017, 11:28 AM IST
What kind of feed can be given before and before the goat of the sheep?



** சினைக் காலத்தில் நல்ல தீவனமளித்தல்தான் நல்ல குட்டி ஈனுதலின் திறவு கோலாகும். தீவனமளித்தல் போதாமலும், குறையுள்ளதாகவும் இருப்பின், நலிந்த இறந்த குட்டிகள் பிறக்க வாய்ப்புண்டு.

** பலமுள்ள ஆரோக்கியமான உயிருள்ள குட்டிகளின் ஈனும் எண்ணிக்கையை இது அதிகரிக்கும்.

Latest Videos

undefined

** பெட்டைகளின் உற்பத்தி வாழ்நாளை நீட்டிக்கும். பெட்டைகளின் பால் உற்பத்தி அளவை அதிகரித்து அதன் மூலம் ஆரோக்கியமான குட்டிகளைப் பெற முடியும்.

** மேலும் இது கம்பள உற்பத்தியையும் அதிகரிக்கின்றது. குட்டிகளில் முடக்குவாதத்தின் நிகழ்வைக் குறைக்கிறது.

** பெட்டைகள் உடல் சோர்வு மற்றும் தளர்வினால் குட்டிகளை ஒதுக்கும் வாய்ப்பும் குறைகிறது. பெட்டைகளுக்கு இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்படும் தீவனக் கலவை

** ஒன்றிலிருந்து இரண்டு கிலோ சோளப் பதனப் பசுந்தீவனத்துடன் பயிறுவகை உலர் புல்அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வீதம் - ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு.

** ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மக்காச் சோளம் அல்லது சோளப் பசுந்தீவனம் வேண்டுமளவும், கடலைப் பிண்ணாக்கு போன்ற பிண்ணாக்கு வகைகள் 50 கிராம், கொடுக்க வேண்டும்.

** அறுவடைக்குப் பின் எஞ்சி இருக்கும் நிலங்களில் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு மேய்ச்சலுடன் 100 கிராம் பிண்ணாக்கு.

 

click me!