பெட்டை செம்மறி ஆடுகளுக்கு இன விருத்திக்கான தீவனம்
** உடல் பருமனால் உடலில் அதிக கொழுப்புச் சேர்ந்து இனப்பெருத்தத் திறனைக் குறைக்கும்.
** ஒரு நல்ல மேய்ப்பாளன், இனப்பெருக்கக் காலத் துவக்கத்திற்கு முன் குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆடுகளின் உடல் பருமனைக் கண்காணித்தல் வேண்டும்.
** உடல் பருத்த பெட்டைகளை தீவனக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தேவையான சீரான உடலமைப்பிற்கும் படிப்படியாகக் கொண்டு வர முடியும்.
** பெட்டைகளை இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்த சீரான மேற்பார்வையின் மூலம் தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி அளிக்க வேண்டும்
பெட்டைகளுக்கான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனம்
** இனப்பெருக்கத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னரே, பெட்டைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வகையில் அவற்றின் தீவனத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க வேண்டும்.
** இதன் மூலம், பெட்டைகள் விரைவில் சினைப்பருவம் எய்தவும், குட்டிகள் ஈனவும் வழிவகுக்கலாம். மேலும், பெட்டைகளின் சினைப்பருவ இடைவெளி சமமானதாகவும், குட்டி ஈனும் எண்ணிக்கை சீரானதாகவும் அமையும்,
** அது மட்டுமல்லாமல், இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனமளித்தல் மூலம் குட்டி ஈனும் விகிதத்தையும், ஒரே ஈற்றில் பல குட்டிகள் ஈனும் விகிதத்தையும் அதிகரிக்கலாம்.
** இந்தியாவில், இந்த காலம் பொதுவாக மே மாத இறுதியில் வருகின்றது. தீவன மூலப் பொருட்கள் கிடைப்பதைப் பொருட்டு வெவ்வேறு வகையான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
** பரிந்துரைக்கப்பட்ட இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் பயிறு மற்றும் புல் வகைத் தீவனங்களின் ஒரு நல்ல கலவை.
** ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு புல் தீவனத்துடன், 150 கிராம் கோதுமைத் தவிடு. புல் தீவனத்துடன் 250 கிராம் தானியம், 450 கிராம் புண்ணாக்கு.
** பயிறு வகை உலர் புல்லுடன் 100 கிராம் கோதுமைத் தவிடு, 150லிருந்து 200 கிராம் தானியம் மற்றும் ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு உடல் எடையில் 10 சதவிகித அளவு பசும்புல் மற்றும் 150லிருந்து 200 கிராம் அடர் தீவனம்.