மண்புழு உரத்திலுள்ள சத்துகள் என்னென்ன? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க…

 |  First Published Oct 10, 2017, 12:17 PM IST
What are the nutrients in vermicompost? Read this for your friend ...



மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.

பொதுவாக மண் புழு உரத்தில் 15 - 21 சதவீதம் அங்கக கார்பன், 0.5 - 2 சதவீதம் தழைச்சத்து, 0.1 - 0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5 - 1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

எந்த பயிருக்கு எவ்வளவு மண்புழு உரம் கொடுக்கணும்?

நெல், கரும்பு, வாழை - 2000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

மிளகாய், கத்தரி, தக்காளி - 1000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

நிலக்கடலை, பயறுவகைகள் - 600 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

மக்காச்சோளம், சூரியகாந்தி - 1000 கிலோ மண்புழு உரம் / ஏக்கர்

தென்னைமரம், பழமரங்கள் - ஒரு மரத்துக்கு 10 கிலோ மண்புழு உரம்

மரங்கள் - 5 கிலோ மரம் ஒன்றுக்கு மண்புழு உரம்

மாடித் தோட்டம் - 2 கிலோ மண்புழு உரம் / செடிக்கு

மல்லிகை, முல்லை, ரோஜா - 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்.

click me!