வாயு இயந்திர உற்பத்தி உரத்தின் பயன்பாடு
காஸ் இயந்திரத்திலிருந்து கிடைக்கும் உரத்தைப் பலவழிகளில் பயன்படுத்தலாம். வெளியே வரும் கழிவில் நைட்ரஜன். காளான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அது நன்கு பக்குவமாகி, மாவுபோல் இருக்கிறது. பாசன நீருடன் கலந்து அதை மிகவும் அனுகூலமான முறையில் பயன்படுத்தலாம்.
அவ்வாறு பயன்படுத்தும்போது உரத்திலிருந்து அதிகபட்ச பலன் கிடைக்கிறது. ஏனெனில் அந்தப் புதுக் கழிவில் 2 சதவிகிதத்துக்கு மேல் நைட்ரஜன் சத்து இருக்கிறது. மண்ணுடன் மிக நன்றாகச் சேரக்கூடிய நிலையிலும் அது இருக்கிறது.
பாசன நீருடன் இந்தக்கழிவை உபயோகப்படுத்த முடியாவிட்டால், கம்போஸ்ட் உரத்தை வெகுவேகமாக மக்க வைப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதற்கு காஸ் இயந்திரத்துக்கு அருகிலேயே பல கம்போஸ்ட் குழிகளைத் தோண்ட வேண்டும். கழிவை ஒரு வாய்க்கால் வழியாக அந்தக் குழிகளில் பாய்ச்ச வேண்டும்.
புல், இலைகள், வைக்கோல், தட்டை போன்ற தாவரப் பொருள்களையும் எல்லாவிதமான கழிவுப் பொருள்களையும் குழியில் ஒர் அளவுக்கு போட்டு அதன் மேல் கழிவைப் பாய்ச்ச வேண்டும். அதன் மேல் மேலும் ஓர் அடுக்கு தாவரக் கழிவுப் பொருள்களைப் போட்டுக் கழிவை மேலே விடவேண்டும்.
இவ்வாறு குழி நிரம்பும் வரை செய்யவேண்டும் அதன் பின்பு கேஸ் இயந்திரத்திலிருந்து வரும் கழிவை வேறொரு குழியில் விடவேண்டும். அப்படியே தொடர்ந்து செய்து வரவேண்டும். எத்தனை குழிகள் என்பது அங்கங்குள்ள நிலைமையைப் பொருத்தது.
காஸ் இயந்திரத்திலிருந்து வரும் கழிவில் நிறைய நுண் அணுக்கிருமிகள் இருப்பதும், கழிவில் சேர்ந்துள்ள பொருட்களும் கம்போஸ்ட் உரம் வேகமாக மக்குவதற்குத் துணை புரிகின்றன என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அல்லது, கழிவை ஒவ்வொரு குழியாகப் பாய்ச்சி நிரப்பிக் கொண்டு வரலாம். பல நாட்களாக கழிவு ஒரு குழியில் நிரம்பிவிட்டால் அடுத்த குழியை நிரப்பலாம். இரண்டாவது அல்லது மூன்றவாது குழி நிரம்பும்போது, உரத்தைத் தோண்டி எடுக்கும் பக்குவத்துக்கு முதல் குழி காய்ந்திருக்கிறது. அதைத் தோண்டி உரத்தை எடுத்தபின்.
மறுபடியும் கழிவை நிரப்புவதற்கு அதைப் பயன்படுத்தலாம், இந்த முறையில் காயும் போது. ஒரளவு நைட்ரஜன் இழப்பு எற்படுகிறது. ஆனால் அதே சமயம் சரியாக உரத்தை எடுத்து உபயோகிப்பது எளிதாகிறது. ஈரமான புதுக் கழிவில் 3 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கிறது என்றும் அது காயும் போது 2 சதவிகிதத்திற்கு குறைந்துவிடுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கோபார் காஸ் உரமும், ரசாயன உரமும் சேர்ந்து ஊட்டச்சத்து மிக்க இயற்கை ஆதார உரமாகவும் இருக்கமுடியும். அதாவது அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் முதலிய இரசாயன உரங்களை அதனுடன் சேர்த்து மிக நயமான, இயற்கை ஆதார உரக் கலவையைத் தயார் செய்யலாம்.
சாண எரிவாயுக் கலனிலிருந்து வெளிவரும் கரைசல், மண் புழு உரம் தயாரிப்பதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இது உரத்தின் தரத்தையும். உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது.