சாண எரிவாயு கலனில் இருக்கும்  இந்தப் பொருள்தான் வாயுவை சேகரிக்க உதவுகிறது...

 |  First Published Feb 2, 2018, 3:20 PM IST
This material in the drainage gas helps to collect gas.



சாண எரிவாயு கலனில் இருக்கும்  வாயு பீப்பாய் 

** இலேசான எஃகுத் தகடு அல்லது கண்ணாடி நார் தகட்டினால் செய்யப்பட்ட பீப்பாய் இது. இது கிணற்றின் வாயில் ஒரு மூடிபோல் அமைந்திருக்கிறது. கரைசலில் இது அமிழ்ந்து, இதற்காகவென்றே கிணற்றில் கட்டப்பட்டுள்ள விளிம்பில் உட்காருகிறது. 

** ஜீரணிப்பானில் போடப்பட்டுள்ள சாணத்திலிருந்து உருவாகும் வாயு இந்தப் பீப்பாயில் சேருகிறது. பீப்பாயில் வாயு சேரச்சேர அது மேலே எழுகிறது. அதில் சேர்ந்த வாயு மேலே குழாயின் மூடியைத் திறந்தவுடன் அதன் வழியாக வெளியே செல்லுகிறது . 

** அப்படிப்பட்ட வாயுவை 100 அடி (30 மீட்டர்) தூரத்துக்குள் தேவைப்படும் போது சமையலுக்கோஅல்லது காஸ் விளக்குகளுக்கோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கிணற்றுக் கட்டிடத்தின் மத்தியில் குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. 

** வாயு பீப்பாய் மேலேயும், கீழேயும் இறங்கும் போது, அது சாயாது சரியான முறையில் இயங்க இந்தக் குழாய் உதவுகிறது. கீழே உற்பத்தியாகும் காஸ் அடிப்பாகம் வழியாக மட்டுமல்லாமல் வேறு எநத் வழியிலும் செல்ல முடியாதபடி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. 

** பீப்பாய்க்கு அடியில் சேரும் வாயு மீது பீப்பாயின் கனத்தின் அளவுக்குப் பிரஷ்ஷர் இருக்கிறது. இந்த பிரஷ்ஷர் மிகவும் குறைச்சல் தான். (அதாவது 3 அங்குலத்திலிருந்து (7.5 செ. மீட்டர்) 6 அங்குலம் (15 சென்டி மீட்டர்) வரை தண்ணீர் மட்டம், அதே சமயம் சமையல் ஸ்டவ் அல்லது காஸ் விளக்குக்கு இந்த அழுத்தம் போதுமானது.

click me!