எண்ணெய் வியாபாரம்
undefined
எண்ணெய்யில் செய்யும் உணவு பொருட்கள் அனைத்திற்கும் நாம் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி.
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் பொருட்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது.
தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில்.
தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.