உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்களை பராமரிக்க இதெல்லாம் நீங்கள் செய்யணும்...

 
Published : Dec 30, 2017, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்களை பராமரிக்க இதெல்லாம் நீங்கள் செய்யணும்...

சுருக்கம்

how to market kopparai cannot

 

உரித்த தேங்காயை 3 நாளுக்குள் உடைக்க வேண்டும். இல்லாவிட்டால் வெப்பத்தில் தேங்காய் ஓடு வெடித்து, உள்ளே அழுகி விடும். 

கொப்பரையை 50 கிலோ, 100 கிலோ மூட்டைகளில் கட்டி வைக்கலாம். மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்கலாம். 

இருப்பு வைக்கப்படும் ஒவ்வொரு நாளும், 50 கிலோ மூட்டையில் கால்கிலோ எடை குறையும். உற்பத்தி செய்த சில நாட்களுக்குள் விற்பது நல்லது. கொப்பரையில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு காயில் பூசணம் பிடித்தால் மற்றவற்றுக்கும் பரவி விடும்.  கொப்பரை தயாரிப்பில் சல்பர் கெமிக்கல் பயன்படுத்துவது முக்கியமானது. ஒரு பாத்திரத்தில் சல்பர் வேதிப்பொருள் அரை கிலோ போட்டு,  பற்ற வைத்தால் புகையும். 

புகை மூட்டத்தில் ஆயிரம் உடைத்த தேங் காயை ஒரு இரவு மூடி வைத்தால் தேங்காயில் உள்ள ஈரப்பதத்தை சீக்கிரம் எடுத்துவிடும். பூசணம் பிடிக்காது.

தோப்புகளில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்களை மொத்தமாக உடைத்து காயவைத்து கொப்பறையாக்கி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

திறந்தவெளி காலியிடங்களில் காயவைக்கப்படும் இந்த தேங்காய்களில் தூசி, மண் படிவதோடு பனி, மழை, காற்றினால் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன. மேலும் பூஞ்சானம் தாக்குதலுக்குள்ளாகிறது.

இதை தவிர்ப்பதற்காக கொப்பறை உலர்த்தும் கருவியை பயன்படுத்தலாம். தேங்காயின் தரத்தை பாதுகாப்பதற்காகவும் விரைவில் அதை உலர்த்தி விற்பனை செய்வதற்கும் கருவியும் இருக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!