நெல் சாகுபடியில் களைக்கருவி பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்:
1.. களைகளை கட்டுப்படுத்தி இயற்கை உரமாக மாற்றுகிறது.
2.. மண்ணை புரட்டி விடுவதால் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்படுகின்றது.• பயிர்களில் புதிய வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.
3.. மேலுரத்தை மண்ணுடன் கலந்து இடுவதால் உர விரயம் தடுக்கப்படுகின்றது.• பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது.
4.. கதிர் முற்றிய தருணத்தில் காற்று, மழை போன்றவற்றால் பயிர்கள் சாயாமல் இருக்க உதவுகின்றது.
செம்மை நெல் சாகுபடியில் களைக்கருவி பயன்படுத்தும் முறை:
1.. கோனாவீடர் களைக்கருவி கொண்டு களைகளை அமுக்கி மண்ணை கிளறி விட வேண்டும்.
2.. களைக்கருவியை நட்ட 10 நாள் கழித்து 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற முறையில் நான்கு தடவை குறுக்கும், நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்.
3.. ஒரு நபரே களைக் கருவியை எளிதாக உபயோகிக்கலாம்.• ஒரு தடவை உபயோகிக்க ஏக்கருக்கு 3 ஆள் தேவைப்படும்.