மாம்பழத்தில் பொதுவாக தத்துப்பூச்சி, தண்டு துளைப்பான், பழ ஈ, பறவைக்கண் போன்ற பூச்சிகள் தாக்கி சேதப்படுத்தும்.
தத்துப்பூச்சி
தத்துப்பூச்சிகளை அசிடேட், பாசலோன், கார்ஃபைரில், போன்ற பூச்சி மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். கார்ஃபைரில் பயன்படுத்தும்போது அதனோடு நனையும் கந்தகம் பயன்படுத்துதல் அவசியம்.
தண்டு துளைப்பான்
தண்டுதுளைப்பானை கட்டுப்படுத்த வண்டுகள் துளைத்த துளைகளில் 3-5 கிராம் வரை கார்போ பியூரானை இட்டு களிமண் கொண்டு மூடிவிடலாம்.
பழ ஈ
பழ ஈயை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம் அல்லது மாலத்தீயான் அல்லது பென்தீயான் தெளிப்பதன்மூலம் கட்டுப்படுத்தலாம்.
பறவைக்கண்
பழங்களில் தோன்றக்கூடிய பறவைக்கண் நோயை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் அல்லது மேங்கோசெப் போன்ற பூஞ்ஞாணக் கொல்லிகளை அறுவடைக்கு முன் தெளித்து கட்டுப்படுத்தலாம்.