முக்கிய பணப்பயிராக தென்னை உள்ளது. ஏராளமான நிலங்களில் தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, தென்னை மரத்தின் இளநீருக்கு கடும் கிராக்கி உள்ளது
தென்னை மரத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன. தென்னை மரத்தில் தற்போது புது வகையான நோய்கள் தாக்கி வருகின்றன. சில புழுக்கள் காரணமாக தென்னை மரங்கள் கருகி விடுகின்றன.
undefined
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில காலங்களாக செம்பான் சிலந்தி நோய் தாக்கி வருகிறது. இந்தவகை நோய் பூச்சிகள் இளந்தேங்காயில் இருக்கும் மென்மையான திசுவைத்தாக்கி சாறை உறிஞ்சுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறை
தென்னையில் தேங்காயை தாக்கும் செம்பான் சிலந்தி நோய் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேங்காயின் பருமன் குறைந்துள்ளது.
செம்பான் சிலந்தியை அழிக்க சில வகை எதிரிபூச்சிகளையே பயன்படுத்த வேண்டும். செம்பான் சிலந்தியை, அந்தோகோரிடு நாவாய் பூச்சி, ஆம்பிளியஸ் சிலந்தி, இரை விழுங்கிபேன், ஸ்டபைலிட் வண்டு அகிய எதிரி பூச்சிகள் கட்டுப்படுத்துகின்றன.
இவை மிக சிறியவையாக இருப்பதால் தேங்காயின்தோடு பகுதிக்கு சென்று, உள்ளே இருக்கும் ஆயிரக்கணக்கான செம்பான் சிலந்தியை தின்று அழித்து விடுகின்றன.
இந்த எதிரிபூச்சிகளால் தென்னை மரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது நீண்ட காலத்திற்கு பயன்தரும் முறையாகும்.
எனவே, எதிரிபூச்சிகளை வாங்கி தென்னையில் விட்டு செம்பான் சிலந்தி நோயை கட்டுப்படுத்தலாம்.