1. மாட்டிற்கு மருந்து மாத்திரை வாயில் போடுவதற்கு ஆண்கள் இல்லாத சமயத்தில் அதை தீவனத்துடன் கலந்து கொடுக்கலாமா?
பதில்:
நிறைய தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு சில மாடுகள் மருந்து கலந்ததால் அனைத்தையும் சாப்பிடாது. கொஞ்சமாக தீவனம் எடுத்து கலந்தும் கொடுக்கலாம்.
2. மாட்டிற்கு தீவனம் வைக்கும் போது அதிகமாக தண்ணீர் வைக்கலாமா அல்லது குறைந்த அளவு தண்ணீர் தான் கொடுக்க வேண்டுமா?
பதில்:
தீவனம் வைத்துவிட்டு அதிகமாக தண்ணீர் வைக்கலாம். தண்ணீர் அதிகம் வைப்பதினால் சிறுநீர் அதிகமாக வெளியேறும். உடலில் உள்ள கிருமிகளும் வெளியேற்றப்படும்.
3. கோழிக்கு அம்மை போட்டுள்ளது அதற்கு என்ன மருந்து போடலாம்?
பதில்:
அம்மை வந்த கோழியை மற்ற கோழிகளிடமிருந்து தனியாக பிரித்து விடவேண்டும். வேப்பிலைக்கொழுந்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி விடவேண்டும். போரிக் பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவலாம்.
சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மோரில் கலந்து கோழிகளுக்கு உண்ண கொடுக்கவேண்டும். அம்மை வரும் காலத்திற்கு முன் தடுப்பூசி போடுவது நல்லது.