** பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும்.
** வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.(வாலின் தசைப் பகுதி பின்னங்காளின் முட்டியை தாண்ட வேண்டும் )
** பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம்
** தொப்புள் பெரியதாக இருபது நலம்.
** பின்னங்கால் நல்ல இடைவெளியுடன் இருப்பது நன்று.
** வயிறு நன்றாக இறங்கி இருக்க வேண்டும்.
** முதுகு எலும்புகள் தெரிவது நல்லது. இது எதற்கு என்றால், பசுவானது, தான் உண்ணும் அனைத்தையும் பாலாக மாற்றிவிடும். இல்லாவிடில், உடலாக மாற்றிவிடும்.
** மடிகள் பெரியதாக இருப்பது நலம்.
** காம்புகலுக்கிடையில் நல்ல இடைவெளி இருத்தல் நல்லது.
** பசு ஆக்ரோசமாக இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.
** பசுவின் கண்கள் நல்ல ஒளியுடன் இருக்க வேண்டும்.
** பசு நுனிப்புல் மேய கூடாது. நன்றாக தீவனம் உண்ண வேண்டும். (நுணிப் புல மேய்வது வயதான பசுக்கள் மட்டுமே..காரணம் பற்கள் தேய்ந்துவிடும்)
** பற்கள் 6 அல்லது 8 கொண்டதாக இருக்க வேண்டும்.
** பசுவின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். நீங்கள் சிறிய குச்சி வைத்து தோலை தொடும்போது, தோல் துடிக்க வேண்டும்.
** மடி நரம்புகள் நன்றாக தெரிய வேண்டும்.
** பசுவின் கீழ் வயிற்றில் தொப்புளில் இருந்து ஒரு நரம்பு மாடிவரை நீண்டு செல்லும். அந்த நரம்பு நல்ல தடிமனாக பெரியதாக இருக்க வேண்டும்.