** மாடுகளுக்கு மடிநோய் கண்டால் மரபுவழி மருத்துவத்தைக் கடைப்பிடித்தால் ஒராண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.
** இப்போது ஆங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறார்கள். ஆனால் மடியில் செலுத்தப்படும் நஞ்சு, 3 வாரங்களுக்கு கறக்கப்படும் பாலில் கலந்து வெளியேறுகிறது.
**அந்தப் பாலை குடிக்கிறவர்களுக்கு - குறிப்பாக - குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. பல வீரியமிக்க மருந்துகள் கால்நடைகளின் உடலிலேயே தங்கிவிடுகின்றன.
** 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களான பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் மருந்துப் பொருள்களின் எச்சம் கலப்பது குற்றமாகும்.
** கால்நடைகளுக்கு ஆன்டிபயாடிக் ஊசி போட்டால் அதன் பாலை குறைந்தபட்சம் 21 நாள்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
** இப்போது ரசாயன உரங்களின்றி பூச்சி மருந்துகள் அடிக்கப்படாமல் வளர்க்கப்படும் பசுந்தீவனங்களையும் பசுந்தீவனப் புல்லையும் கொடுத்து பராமரிக்கப்படும் பசுவின் பால் லிட்டருக்கு ரூ.40 என விற்கப்படுகிறது.
** இயற்கை உணவுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது என்பது சரியே.