கால்நடைகளுக்கு ஏற்படும் இந்த நோய்களுக்கு இயற்கை வைத்தியத்தில் மருந்து இருக்கு...

 |  First Published Feb 10, 2018, 2:08 PM IST
These are the diseases attacking livestock



 

** கால்நடைகளில் கோமாரி நோயைக் குணப்படுத்த தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. இன்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இல்லாத கிராமங்களில், ஒரு முற்றிய தேங்காய்த் துருவலோடு மஞ்சளையும் வேப்பிலையையும் சம அளவு அரைத்துக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள்.

Tap to resize

Latest Videos

** சினைக்கு வராத மாடுகளுக்கு தொடர்ந்து ஒரு மாதம் சோற்றுக்கற்றாழை மடல்களைக் கொடுத்து பருவமடைய வைக்கின்றனர். 

** மாடுகளின் மலட்டுத்தன்மையை நீக்க, ஆனை நெருஞ்சி தழைகளைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். 

** கால்நடைகளின் சுவாசக் கோளாறுகளுக்கு ஆடாதொடை இலைகளையும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி தழைகளையும் தூதுவளைத் தழைகளையும் பயன்படுத்துகின்றனர்.

** கால்நடைகளின் கழிச்சல் நோய் குணமாக கொய்யா மரத்தின் இலைகளைக் கொடுத்தும் மாதுளம் பிஞ்சுகளைக் கொடுத்தும் குணப்படுத்துகின்றனர்.

** செரிமானக் கோளாறுகளுக்கு இஞ்சி, உப்பு அல்லது சுக்கு, பிரண்டை பயன்படுத்துகின்றனர். 

** காயங்களை ஆற்றுவதற்கு குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலைகளைக் கசக்கித் தடவுகின்றனர்.

** ஆடுகளைப் பற்றிய ஒட்டுண்ணிகளை விரட்டத் தும்பைச் செடிகளைப் பயன்படுத்துகின்றனர். 

** காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்புப் பொடியைக் கொடுக்கின்றனர். வேம்பும் மஞ்சளும் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

** தோல் நோய்களுக்கு மருதாணி இலைகளை அரைத்துத் தடவுகின்றனர்.

click me!