வெட்டிவேரை வைத்து கழிவு நீரை சுத்தம் செய்யலாம். எப்படி?

 |  First Published Jun 22, 2018, 3:55 PM IST
Wash the waste water with the cutter. How?



** கழிவுநீர் நிலைகளாக மாறிய நீர் நிலைகளில் சுத்தம் செய்ய  வெட்டிவேர் உதவும். மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை மூலம் கழிவு நீரை சுத்தம் செய்ய முடியும். 

** கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துகிறது. அதனால் ஆகாய தாமரை படர்ந்து வளர்கிறது.   இதற்கு நிரந்தர தீர்வு குறைந்த செலவில் உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

** ஐட்ரோபோனிக்ஸ் முறையில் மிதக்கும் மூங்கிலால் ஆன வெட்டிவேர் படுக்கை கழிவுநீர் நிலைகளில் மிதக்க விடவேண்டும். 

** வெட்டிவேர் அந்த நீரில் நன்றாக வளரும். வளரும் பொழுது அந்த நீரை சுத்திகரித்து கொண்டே இருக்கும். 

** நீரில் கலந்து இருக்கும் ஹெவி மெட்டல், சோப்பு   தன்மை, எண்ணை பசை போன்ற தன்மைகளை உறிந்து நன்றாக வளர்கின்றது. 

** பொதுவாக மின்சாதனங்கள் கொண்டு சுத்திகரிப்பு செய்யும் மையங்கள் அருகில் உள்ளவர்கள் எந்நேரமும் மூக்கை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்.  மின்சார செலவும் அதிகம். கடைசியாக உருவாகும் கழிவை வெளியேற்ற கஷ்டப்பட வேண்டும். 

** ஆனால் இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம் வெட்டிவேர். எந்த செலவும் வைக்காமல் , தட்பவெப்ப நிலைகளை பொறுத்து கொண்டு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்கும்

click me!