விதை நெல்லை இப்படிதான் சேமிக்கணும்? எத்தனை வழிமுறைகள் இருக்கு...

 |  First Published Jun 21, 2018, 3:47 PM IST
Is this way to save seed? How many steps are there



விதை நெல்லை சேமிக்கும் முறை...

** விதை நெல்லைச் சேமிக்கும்போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். 

Latest Videos

undefined

** ஈரப்பதம் கூடினாலும் குறைந்தாலும் அதன் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால் விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

** விதைநெல்லை சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது சலசலவென்று சத்தம் கேட்கும். 

** கைகளில் அள்ளிவைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் கடுக்கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்து நெல் 12% ஈரப்பதத்துடன் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். 

** இந்தளவு ஈரப்பதம் இருந்தால் விதையின் முளைப்புத்திறன் 80% அளவுக்கு இருக்கும். சேமிக்கும்போது வேப்பிலை, வசம்புதூள் ஆகியவற்றை பயன்படுத்தினால் பூச்சிகள் தாக்காது. விதை மூட்டைகளை நேரடியாக தரையில் வைத்தால் பூமியின் ஈரப்பதம் விதைகளில் பரவ வாய்ப்பு உண்டு. 

** பலகை, கற்கள் ஆகியவற்றின் மீதுதான் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். இப்படி சேமித்த விதையை 12 மாதங்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது.
 

click me!