கோகோ பயிர்களை தாக்கும் நோய்கள்..
** இளங்காய் வாடல் நோய்
undefined
கோகோவின் இளங்காய்கள் சுருங்கியும், உருமாறியும் காணப்படுவது இதன் அறிகுறி. பிஞ்சுகளின் பளபளப்புத் தன்மையை முதலில் இழக்கும், பின்பு சுருங்கும், இது எதனால் உருவாயிற்று என்பதை அறிந்து மருந்தளித்தல் அவசியம்.
** சொறி நோய்
இந்த நோய் முதன்மைத்தண்டு மற்றும் விசிறிக் கிளைகளில் பாதிப்பை உருவாக்கும். இதைக் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிதளவு செதுக்கி எடுத்துவிட்டு ஆக்ஸிகுளோரைடு பசையைத் தடவ வேண்டும்.
** மரக்கரி காய் அழுகல் நோய்
ஆண்டு முழுவதும் இந்த நோயின் தாக்குதல் இருந்தாலும் கோடைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும். காய்களின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி அடர் பழுப்பு நிறத்தில் துவங்கி கருமை நிறப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும்.