மண்புழு உர தயாரிப்பு தொட்டியில் ஊற்றப்பட்ட உபரிநீர் கீழே திரவ உரமாக வெளிவரும். இதுவே வெர்மிவாஷ் எனப்படும்.
இதில் தழை, மணி, சாம்பல், நுண்ணூட்டச்சத்துக்கள் திரவநிலையில் உள்ளதால் இதனை பயிர்களுக்கு தெளிக்கும்போது பயிர்கள் எளிதில் இச்சத்துக்களை உட்கிரகித்துக்கொண்டு வளர்ந்து நற்பலனை கொடுக்கிறது.
மண்புழு உரத்தில் சுமார் 1.5 சதவீதம் தழைச்சத்து, 0.5 சதவீத மணிச்சத்து, 0.3 சதவீத சாம்பல் சத்து, 10-12 சதவீதம் அங்கக கரிம பொருட்கள் ஆகியவை அடங்கி உள்ளன.
ஒரு ஏக்கருக்கு மண்புழு உரத்தை ஒவ்வொரு வருடமும் இட்டால் மண்ணின் உயிர்த் தன்மையை தூண்டுகிறது.
அங்கக பொருட்களின் ஆதாரமாக செயல்பட்டு மண்ணிற்கு உணவளிக்கிறது.
உரத்தில் அனைத்து சத்துக்களும் தாவரங்களுக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய தன்மையில் உள்ளதால் பயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறனை தூண்டி மகசூலை 20 - 30 சதவீதம் அதிகரிக்கிறது.
மேலும், விளைபொருட்களின் மணம், குணம், நிறம், சுவை, வைப்புத்திறனையும் அதிகரிக்க செய்கின்றன.
எனவே விவசாயிகள் மண்புழு உரத்தினை நிலத்தில் இட்டு அதிக அளவு மகசூலை எடுக்கலாம்.