காய்கறிப் பயிர்களில் விதைநேர்த்தி:
1.. காய்கறிப்பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய், மற்றும் பூசணிப்பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கலந்து பின்னர் விதைக்கவும்.
2.. காய்கறி பயிர்களில் நாற்றழுகல் நோயைத் தடுக்க ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.