வாழைக்கு சூடோமோனாஸ் தெளிக்கும் முறை:
அ.. 0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கடைசி வாழை சிப் வெளிவந்த பின்னர் தெளிக்கவும்.
ஆ. இதேபோன்று 30 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் வரை தெளிக்கவேண்டும்.
மாம்பழத்திற்கு சூடோமோனாஸ் தெளிக்கும் முறை:
அ. 0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை காய் பிடித்து 15 நாட்களுக்கு கழித்து தெளிக்கவும்.
ஆ. இதேபோன்று 30 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் அறுவடை வரை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதால் வாழை மற்றும் மாம்பழத்தில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலை அடையலாம்.