நெற்பயிரில் குருத்துப் பூச்சி தாக்குதலை வருமுன் தடுக்கும் வழிகள்:
1.. நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம்.
2.. நாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
3.. நாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன் கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும்.
4.. நாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட்டால் குருத்துப் பூச்சிகளை வருமுன் தடுக்கலாம்.
நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை வந்தபின் தடுக்கும் வழிகள்
1.. நடவு வயலில் குருத்துப் பூச்சி உண்டாக்கும் சேதத்தைக் கண்டறிந்து பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2,. ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் மற்றும் அந்திப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்பொழுது டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விட வேண்டும்.
3.. குருத்து காய்தல் 5 விழுக்காடாக இருக்குமானால் வேப்பம் பருப்பு சாறு 5 விழுக்காடு தெளிக்க வேண்டும்.
4.. குருத்து காய்தல் 10 விழுக்காடாக இருக்குமானால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லிகளான குயினைல்பாஸ் 400மிலி (அ) மேனோகுரோட்டோபாஸ் 400மிலி /ஏக்கர் ஏதாவது ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
5.. இதனுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளை கையாண்டால் குருத்துப் பூச்சிகள் வந்தபின் தடுக்கலாம்.