சம்பாவில் நெல் நடவு செய்திருந்தால் வயலில் நாற்று கருகும் நிலை வரும்.
இதற்கு வயல் மண்ணை முறைப்படி மாதிரி எடுத்து பரிசோதித்தால் மண்னில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதே காரணம்.
வயல் வடிகால் நிலமாக இருப்பதால் உப்பின் அளவு அதிக அளவில் உள்ளதால் உப்பு ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மூலம் பயிர் காய்ந்து விடுகிறது.
இதனைத் தீர்க்க ஆற்று தண்ணீரை பாசனம் செய்து உழுது, கட்டிய தண்ணீரை வெளியேற்றவும்.
நிலத்தை சுற்றி வடிகால் வசதியை பெருக்க காண் எடுக்கவும்.
அதிக அளவில், தொழு, பசுந்தாள் உரங்களை உபயோகிக்கவும்.
நடவில் பரிந்துரைக்கப்பட்ட யூரியாவை காட்டிலும் 10 விழுக்காடு அதிகமாக இடவும். நடும்பொழுது குற்றுக்கு மூன்று நாற்றுகள் வீதம் நடவு செய்யவும்.