வாழை வாடல் நோய்
வாழை நடவு செய்யும்போது அதில் வாழை மரத்தில் இலைகள் பழுத்து போய் வரும். இந்த அறிகுறியை வாழையில் வில்ட் என்று சொல்லக்கூடிய வாழை வாடல் நோய் பாதிப்பால் வரும்.
இதனைக் கட்டுப்படுத்த ஒரு வாழை மரத்திற்கு கார்பண்டாசிம் 100 மிலி தண்ணீரில் / 2 கிராம் என்ற அளவில் கலந்து வாழை மரத்தில் அடிப்பாகத்தில் மண்ணை எடுத்துவிட்டு வேர் கிழங்கு முழுவதும் நன்கு நனையுமாறு ஊற்றிவிடவும்.
இவ்வாறு செய்துவந்தால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.