நெற்பயிரில் புகையான் தாக்குதல்:
தற்போது நிலவும் காலநிலை காரணமாக குறுவை சாகுபடியில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் பரவலாக தென்படுகிறது.
புகையான் பூச்சிகளின் தாக்குதல் அறிகுறிகளை தெரிந்துகொண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
புகையான் பூச்சிகள் நெற்பயிரின் அடிப்பாகத்தில் நீர்ப்பரப்பின் மேல் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இளம்பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்.
கதிர் வந்த நிலையில் தாக்குதல் ஏற்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும். இதனால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படும்.
தாக்குதல் அதிகரிக்கும்போது ஆங்காங்கே வட்டமாக பயிர் புகைந்து திட்டு திட்டாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிகள்:
தாக்குதலை தவிர்க்க, 8 அடிக்கு ஒரு பட்டம் வீதம் பயிரை பிரித்துவிடவேண்டும்.
வயலில் தொடர்ந்து நீர் தேங்குவதை தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சவேண்டும்.
புகையான் பூச்சியின் தாக்குதல் தென்பட்டவுடன் வயலில் உள்ள நீரை வடித்துவிடவேண்டும்.
பின்னர் பயிர்களின் தூர்பாகத்தில் சூரிய ஒளி படுமாறு பட்டம் பிரித்துவிட்டு, அதிகம் தழைச்சத்து இடுவதை தவிர்த்து தேவைப்படும்போது மட்டும் தழைச்சத்தி இடவேண்டும்.
அதேபோல் விளக்குபொறி இடுவதை தவிர்த்து தேவைப்படும்போது மட்டும் தழைச்சத்து இடவேண்டும்.
விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் புகையான் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
புகையான் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் செயற்கை பைரித்ராய்டு, மௌர்ந்தகளான அசிபெட், கார்போபியூரான், பென்தியான், மீதைல்பாரத்தியான், போரேட், பாசலோன், பாஸ்போமிடான், குயினால்பாஸ் ஆகிய மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
இந்த முறைகளை கடைபிடித்து நெற்பயிரில் புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.