நெற்பயிரில் இலைக்கருகல் நோய்த் தாக்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்

 |  First Published Jun 12, 2017, 12:16 PM IST
some ways to solve bug attack in crops



 

நெற்பயிரில் இலைக்கருகல் நோய்த் தாக்குதல்

Tap to resize

Latest Videos

தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

தற்போது பயிர்கள் தூர்கட்டும் வளர்ச்சிப்பருவத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக தழைச்சத்து அதிகம் இடப்பட்ட வயல்களில் பாக்டீரியா இலைக்கருகல் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.

இதற்கு உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

அறிகுறிகள்:

நெற்பயிரில் இலையின் நுனியில் இருந்து நடு நரம்பின் இருபுறமும் கீழ்நோக்கி நீர்க்கசிவுடன் கூடிய கோடுகள் தோன்றி பின்னர், மஞ்சள் நிறமாக மாறும். இலையின் நுனிப்பகுதி சரிந்து காணப்படும்.

பின்னர் இலைக்கருகல் கருகிவிடும். தாக்கப்பட்ட இலைகளை வெட்டி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சிறிதளவு நீரில் மூழ்குமாறு வைத்து பார்க்கும்போது பாக்டீரியா கசிந்து நீரின் நிறம் சற்று மங்களாக மாறும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

நோய் தாக்கிய பயிருக்கு யூரியா இடுவதை தவிர்க்கவேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோயை ஆரம்ப பயிருக்கு யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோயை ஆரம்ப காலத்தில் 20 சதவீத பசுஞ்சாண கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பசுஞ்சாண கரைசல் தயார் செய்ய 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும். மறுநாள் மேலாக உள்ள தெளிந்த நீரை மட்டும் எடுத்து 20 லிட்டர் வரும்வரை தண்ணீரை கலந்தால் 20 சதவீத பசுஞ்சாண கரைசல் கிடைக்கும். இதனை காலை அல்லது மாலை வேளையில் நோய் அறிகுறி தோன்றியவுடன் தெளித்தால் நோய் முழுவதையும் கட்டுப்படுத்தலாம்.

பசுஞ்சாண கரைசல் தெளிக்க இயலாத இடங்களில் ஏக்கருக்கு 2 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற எதிர் உயிரி பேக்டீரியாவை 2 லிட்டர் புளித்த தயிர் மற்றும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.

சாணக்கரைசல், சூடோமோனாஸ் பாக்டீரியா ஆகியவை கலந்து தெளித்தும் இலைக்கருகல் நோயையும் கட்டுப்படுத்தலாம்.

நோய் தாக்குதல் தென்பட்டால் அதிகமாக தென்பட்டால் காப்பர் ஹைட் ராக்ஸைடு மருந்தை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

நோய் தாக்கப்படாத வயல்களில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா இடலாம்.

இந்த பாக்டீரியாவை கொண்டு இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தி பயனடையலாம்.

click me!