பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்…

 |  First Published Jun 3, 2017, 12:02 PM IST
Vulnerability and control methods



பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகள்

பார்த்தீனியம் ஓர் நச்சுக்களை. இது மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

Tap to resize

Latest Videos

இக்களையானது, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள களைச் செடியாக பரவியுள்ளது.

இவை ஆஸ்துமா, தொழு நோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.

கால்நடைகள் இக்களைச் செடியை உண்ணாது. அது கடந்து செல்லும் போது, மாட்டின் மடிப்பகுதி இக்களைச் செடியால் பாதிக்கப்பட்டு ஜுரத்தினை உண்டாக்குகிறது.

மேலும் கால்நடையின் வாய் மற்றும் குடல் பகுதிகள் அல்சர் புண்ணை உண்டுபண்ணுகிறது.

இச்செடியின் மகரந்த தூள்கள் மனிதன் மற்றும் கால்நடைக்கு ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.

பார்த்தீனியம் கட்டுப்படுத்தும் முறைகள்:

பொது இடங்களில் மற்றும் பயிரிடாத நிலங்களில் இருக்கும் பிற தாவரங்கள், இயற்கை சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

மெக்ஸிகன் வண்டுகள் மழைக்காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும். இவற்றினை சேகதித்து பார்தீனியம் மிகுந்த பகுதிகளில் இட வேண்டும்.

கைகளையாக அகற்றும் போது தோழிலாளர்கள், கையுறை, கால் உறை அணிந்து கொண்டு அகற்றுவதுடன், தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படதவாறு பார்துக் கொள்ள வேண்டும்.

பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் பகுதிகளில் அட்ரசின் என்ற களைக்கொல்லியை 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.   (அல்லது )

சாதராண உப்பு 200 கிராம் மற்றும் 2.மி.லி, டீப்பாலை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் முன் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.    (அல்லது)

2, 4 டி சோடியம் உப்பு 10 கிராமுடன் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 2 மிலி டீபால் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.  (அல்லது)

ஒரு லிட்டர் தண்ணீரில் கிளைபோசேட் 15 மிலியுடன் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 2 மிலி டீ பால் கலந்து பூக்கும் முன் தெளித்திட வேண்டும்.  (அல்லது)

மெட்ரீபூசின் 4 கிராம் 2 மிலி டீ பாலுடன் ஒரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளித்துக் இக் களைகளை கட்டுப்படுத்தலாம்.

click me!