மல்லிகையில் தோன்றும் பூஞ்சான நோயை கட்டுப்படுத்த இந்த வழிகளை பின்பற்றுங்க…

First Published Jun 3, 2017, 11:59 AM IST
Highlights
Follow these ways to control fungal diseases that appear in the jasmine ...


மல்லிகையில் தோன்றும் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தும் வழிகள்

முதலில் மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது அவசியம்.

மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றும் பூஞ்சான நோயில் இருந்து கட்டுப்படுத்த பதியன் போடும் முன் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம், சூடோமோனாஸ் 1 கிலோகிராம் இரண்டையும், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் வைக்க வேண்டும். பின்னர் மண்ணுடன் கலப்பதால் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் இறந்துவிடும்.

பின்னர் காற்றின் மூலம் வரும் கிருமிகளை கட்டுப்படுத்த சாஃப் அல்லது கோம்போ பிளஸ் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 – 4 கிராம் அளவில் கலந்து பதியனை நனைத்து மேலும் பதியன் தூரில் நனையச் செய்ய வேண்டும்.

பத்து நாட்கள் இடைவெளியில் 3 முறை இதேபோல் மருந்தை தண்ணீரில் கலந்து பதியனை நனைத்து பாதுகாப்பதன் மூலம் மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்தலாம்

click me!